(+035) 527-1710-70
order@freshen.com
Free shipping for orders over $59. $5.00 USPS Shipping on $25+ !
காந்தி உலக மையம் (காந்தி வேர்ல்ட் பவுண்டேஷன்) ஒரு அரசியல் சாராத, தொண்டு செய்யும் சமூக சேவை அமைப்பாகும். காந்திய சிந்தனைகளையும், சமூக மாற்றத்திற்காண மாறுபட்ட செயல்பாடுகளையும், இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில், எண்ணற்ற விழிப்புணர்வு முகாம்கள், செயல்பாடுகள் மூலமாகவும் விதைத்து, மக்களின் மகிழ்ச்சிக்கும் மாற்றத்திற்குமான ஆணிவேரை பலப்படுத்துவதும், குறிப்பாக வருங்கால இளம் தலைமுறைகளின் மனநல பாதுகாப்பு, பாரம்பரிய மீட்டெடும்பு மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அறக்கட்டளை ஆகும்.
மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா, தமிழக ஆளுநர் உள்ளிட்ட எண்ணற்ற சான்றோர்கள் காந்தி உலக மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
பொதுவாகவே பல வருடங்களாக, தமிழகத்தில், பாரம்பரிய நெல் திருவிழா, உணவுத்திருவிழா, இயற்கை விவசாயிகள் சந்தை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, பாரம்பரிய மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என தனித்தனியாக வெவ்வேறு தளங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த சூழலில், காந்தி உலக மையம், இவையனைத்தையும் ஒருங்கிணைத்து,
மண்ணும் மரபும் என்ற ஒரே குடையின் கீழ், இயற்கை வேளாண் சந்தை, பாரம்பரிய நெல் மற்றும் விதைத்திருவிழா, கால்நடைத்திருவிழா, பாரம்பரிய உணவுத்திருவிழா, பாரம்பரிய விளையாட்டுகள், நாட்டுப்புறகலைகளின்சங்கமம், கண்காட்சிகள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் கருத்தரங்கங்கள் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகச்சிறப்பாக, பிரம்மாண்டமான வடிவில், ஒருங்கிணைத்து பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு காணொளி கட்சிகளாகவும், அனுபவரீதியாகவும், நேரடியாகவும் கொண்டுசேர்க்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி, பல கிராமப்புற விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் நலிவடைந்த கலைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளித்ததோடு, மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாய் அமைந்து. இது போன்ற ஒருங்கிணைந்த பாரம்பரிய நிகழ்ச்சிகள், இன்று பல இடங்களில் நடைபெற்று வருவதை கண்டு காந்தி உலக மையம் பெருமிதம் கொள்கிறது.
இந்த நிகழ்ச்சியில், இயற்கைவேளாண் பொருட்களுக்கான மற்றும் விவசாயிகளின் நேரடிசந்தை, சித்தமருத்துவமுகாம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளான, தெருக்கூத்து, நிழல்பாவை கூத்து, பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற பாடல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மற்றும் மரபு விதைகள் காட்சிப்படுத்தல், அரிய வகை மூலிகை கண்காட்சி, பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் போட்டிகள், மரபு சார்ந்த வீட்டு உபயோகப்பொருட்கள், மண்பாண்டம் தயாரிப்பு, 3000 வருடம் பழைமை வாய்ந்த இசைக்கருவிகள் காட்சியகம், பண்டைய விவசயிகள் பயன்படுத்திய கருவிகள், பழங்கால போர்க்கருவிகள் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுகள், அழிந்து வரக்கூடிய நாட்டுமாடுகள், ஆடுகள், நாய்கள் மற்றும் கோழிகள் போன்ற கால்நடைகளின் அணிவகுப்பு போன்ற நிகழ்வுகளுடன் பல்துறை நட்சத்திரங்ககள் கலந்துகொள்ளும் கருத்தரங்கங்கள், பயிற்சி பட்டறைகள் மற்றும் பல மரபு சார்த்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகிறது.
கிராமப்புற விவசாயிகள், தங்களது விளைப்பொருட்களை, எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல், தாங்களே விலை நிர்ணயித்து சந்தைப்படுத்தும் வாய்ப்பினை உருவாக்கிடவும், இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் சந்தை நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. இதனுடன், மகளிர் சுய உதவிக்குழுப்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் வாய்ப்பளிப்பதற்கும் இந்த நிகழ்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது. இந்த முயற்சி, தமிழகம் முழுவதும், 38 மாவட்டங்களிலும் கொண்டுசேர்க்கும் பணிகளிலிலும் காந்தி உலக மையம் தன்னை ஈடுபடுத்தி வருகிறது.
இன்னும் பல… இவையெல்லாம் ஒரே இடத்தில்…